புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்

2018-11-19

வாசிப்பு மாத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும் மாபெரும் புத்தக கண்காட்சியொன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையின் பிரபல புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலையின் பிரதான பங்களிப்புடன் இடம்பெறும் குறித்த கண்காட்சியில் பிரபல எழுத்தாளர்கள் பற்றிய நூல்கள், இந்திய எழுத்தாளர்களின் நூல்கள், பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான நூல்கள், ஆய்வாளர்களுக்கான நூல்கள், ஆன்மீகம் தொடர்பான நூல்கள், சிறுவர்கள் முதல் முதியவர்கள் என பல்வேறு தரப்பினருக்குமான நூல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாசிப்பு மனிதனை முழுமையடையச் செய்கின்றது என்ற தொனிப்பொருளில் நடைபெற்று வந்த தேசிய வாசிப்பு மாததிற்கு இணையாக இம்மாபெரும் புத்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks