சீரற்ற காலநிலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளில் மாநகர அனர்த்த முன் ஆயத்தக் குழு

2018-11-07

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, மழை நீர் தேங்கி நின்ற இடங்களை அடையாளங்கண்டு அந்நீர் வடிந்தோடக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி, பாரிய அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கௌரவ மாநகர முதல்வரின் வழிகாட்டலில் மாநகர அனர்த்த முன் ஆயத்தக் குழு ஈடுபட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் நிர்வாக எல்லைக்குள் சட்ட விரோதமான முறையில் பொதுமக்களால் அடைத்து வைக்கப்பட்ட வழமையான நீரோட்டப் பாதைகளை திறந்து பாரிய வெள்ளம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிந்தோட வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி இன்று (06) புதுநகர், இருதயபுரம், மாமாங்கம், பூம்புகார், கருவேங்கேணி, மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களில் குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகளில் கௌரவ மாநகர முதல்வர் சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர் சத்தியசீலன், கௌரவ மாநகர சபை உறுப்பினரும் அனர்த்த முகாமைத்துவக்குழு உறுப்பினருமான சிவானந்தராஜா, கௌரவ மாநகர சபை உறுப்பினரும் வேலைகள் குழு தலைவருமான துரை மதன், கௌரவ மாநகர சபை உறுப்பினர் இராஜேந்திரன், கௌரவ மாநகர சபை உறுப்பினர் அசோக், மாநகர தொழிநுட்ப உத்தியோகத்தர் ராஜகுமார் மற்றும் மாநகர சபையின் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks