அரச திணைக்களங்களில் செவிப்புலன் வலுவற்றோரின் நன்மை கருதி எதிர்காலத்தில் தொடர்பாடல் உத்தியோகத்தர் நியமனம் - முதல்வர்

2018-09-29

அரச திணைக்களங்களில் தமது தேவைகளை நிவர்த்தி செய்யவரும் செவிப்புலன் வலுவற்றோர் அவர்களது தொடர்பாடலில் அன்றாடம் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நோக்கில் எதிர்காலத்தில், மட்டக்களப்புமாநகர சபை உட்பட ஏனைய அரச திணைக்களங்களிலும் சைகை மொழி தொடர்பாடல்உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர்தி.சரவணபவன் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றொர் புனர்வாழ்வு நிறுவனத்தினரின் 18 ஆவது ஆண்டு நிறைவுவிழாவானது தாண்டவன்வெளி YMCA மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (29.09.2018) இடம்பெற்றது. இதில்கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாநகரசபையில் இதுவரையில் 22 பேருக்கு அதிகமான செவிப்புலன் வலுவற்றோர் வேலைசெய்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் எமது ஆட்சி காலத்துக்குள் நிரந்தர ஊழியர்களாக நியமனம்பெற்று கொடுப்பதே எமது இலக்காகும்.அதேபோல எமது காலத்திற்குள் மேலும் பல இளைஞர், யுவதிகளுக்குவேலைவாய்ப்புகளை வழங்கவும் உத்தேசித்துள்ளோம் அவ்வேளையில் செவிப்புலன் வலுவற்றோரையும்உள்ளீர்க்க மாநகர சபையானது முன்னிற்கும்.

அதேபோல செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் உதைபந்தாட்ட அணியினர் அண்மையில் நடைபெற்றஉதைபந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமைசேர்த்திருந்தார்கள். இவர்கள் படிப்படியாக முன்னேறி தேசிய மட்டம் வரைச் சென்று சாதனைகள் பல புரியவேண்டும். இதற்கான பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதற்கும் எமது வெபர் மைதானத்தை இலவசமாகவழங்கவும் தயாராக உள்ளோம்.

ஏனையவர்களைப்போல காலத்தை வீணாக்காது, தங்களைப்போன்று மாற்றவர்களையும்இணைத்துக்கொண்டு, தங்களுக்கென்று ஓர் சைகை மொழியின் கீழ் உறவாடி இயங்கிக்கொண்டிருக்கும்செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்திறிற்கு எனது பாராட்டுகள், நீங்கள் வளரவேண்டும், கல்விப்பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். நீங்கள் உங்களது சங்கத்தின் செயற்பாடுகளில் மட்டும்நின்றுவிடாது, சமூக அக்கறையுடன் பல செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதனை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. டெங்கு ஒழிப்புவேலைத்திட்டத்தில் எம்மோடு இணைந்து கொண்டதுடன் எமது மாநகரின் சுற்றாடலை பாதுகாக்கும் பல சிரமதான பணிகளிலும் உங்களது பங்களிப்பு இன்றியமையாதாகஅமைந்து வருகின்றது. இதற்கு எமது மாநகர சபை சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும்தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமுக நலன் கருதி இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளில் தமது பங்களிப்புகளை வழங்கியவர்களைப் பாராட்டி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் (அமல்), மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks