தம்புள்ளை மாநகர முதல்வர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்

2020-08-25

தம்புள்ளை மாநகர முதல்வர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சினேகபூர்வ விஜயமொன்றினை இன்று (24.08.2020) மேற்கொண்டார்.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ள தம்புள்ளை மாநகர சபையின் முதல்வர் ஜலிய ஒபெத மற்றும் தம்புள்ளை மாநகர சபையின் பிரதி முதல்வர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தனர்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நிலைப்பாடுகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாநகரத்திற்குள் புதிய அரசாங்கத்தின் ஊடாக நிதிகளைப் பெற்று அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாநகர முதல்வர்கள் சம்மேளனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் கொண்டு செல்வதோடு மாநகர சபைகளுக்கும் அதனோடு இணைந்து செயற்படும் அரச நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுகளை பலப்படுத்தி பேண்தகு அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேற்படி சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks