மட்டு மாநகர பாடசாலைகளுக்கிடையிலான வினாவிடைப் போட்டியில் மகாஜனக் கல்லூரி முதலிடம்

2019-11-05

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையானது பல நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து செய்து வருகின்றது. அந்த வகையில் இன்று (05) சஞ்சிகை வெளியீடு, நூலகங்களுக்கு புத்தகங்களை பகிர்ந்தளிப்பு, பரிசு வழங்கலும் கௌரவிப்பு நிகழ்வானது மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.

கௌரவ மாநகர உறுப்பினரும் நூலக மற்றும் மக்கள் மேம்பாட்டுக்குழு தலைவருமான வே.தவராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு முதன்மை அதிதியாக கௌரவ மாநகர முதல்வர் தி.சரவணபவன் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக கௌரவ பிரதி மாநகர முதல்வர் க.சத்தியசீலன், மாகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மட்டக்களப்பு பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி குலேந்திரகுமார், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ மற்றும் விசேட அதிதிகளாக மாநகர சபை கௌரவ உறுப்பினர்கள், நூலக மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

வாசிக்கும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடம் இருந்து ஆரம்பிப்போம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்களின் நடனம், கவிதை, பேச்சு, அதிதிகளின் உரை, நூலகங்களை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கான கௌரவிப்பு,

கல்லடி, புதூர், அரசடி, மட்டக்களப்பு நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்தல், சஞ்சிகை வெளியீடு, நூலகங்களால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல் போன்றன இடம்பெற்றன.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks