பிறண்டிக்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் வெபர்அரங்கிற்கு மின் ஒளி

2019-10-04

வெபர் விளையாட்டரங்கில் இரவு நேரப் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் விளையாட்டு வீரரர்களினதும், நடை பயிற்சிகளில் ஈடுபடும் பொதுமக்களினதும் நன்மைகருதி மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க பிறண்டிக்ஸ் நிறுவனம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் பங்களிப்புடன் மின் ஒளி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

11 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அதற்குரிய உரிமைத்துவ ஆவணங்கள் பிறண்க்ஸ் நிறுவனத்தின் கிழக்கிற்கான பணிப்பாளர் செந்தில் ஐஸ்வரன் அவர்களால் மாநகர ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிறண்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks