பிரதி ஆணையாளராக உதயகுமார் சிவராசா அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

2019-09-26

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராக திரு. உதயகுமார் சிவராசா அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றி வந்த இலங்கை நிர்வாக தரத்தை சேர்ந்த திரு.நாகராஜா தனஞ்ஜெயன் அவர்கள் கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்றதன் காரணமாக மாநகர சபையில் ஏற்பட்டிருந்த பிரதி ஆணையாளர் பதவிக்கான வெற்றிடத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிர்வாக சேவையை சேர்ந்த திரு உதயகுமார் சிவராஜா அவர்கள் நியமனம் செய்யப்பட்டதன் வகையில் 25.09.2019 அன்று மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks