மாநகர சபைக்கான புதிய இயந்திரங்கள்

2019-03-07

மட்டக்களப்பு மாநகர சபையினால் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு 07.03.2019 அன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

உள்ளக உள்நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்பட்ட நீர்த்தாங்கி, கழிவு அகற்றும் வாகனங்கள், மற்றும் மாநகர சபை நிதியினால் கொள்வனவு செய்யப்பட்ட மண் அகழ்வு இயந்திரமும் மாநகர சபையின் சுகாதார பிரிவுக்கும் , வேலைப்பகுதிக்கும், தீயணைப்பு பகுதிக்கும் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் நானஞ்சயன். மாநகர பிரதம கணக்காளர், பொறியிலாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks